குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு 'சீல்'- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி


குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு சீல்- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி
x

மதுரையில் குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதுரை


மதுரையில் குட்கா, பான்மசாலா விற்ற 19 கடைகளுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

19 கடைகளுக்கு சீல்

மதுரை மாவட்டத்தில் அரசு தடை விதித்த குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போலீசாரும் மாவட்டம் முழுவதும் அடிக்கடி தீவிர சோதனை நடத்தி வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்த பின்னரும் அவர்களின் எச்சரிக்கையை மீறி குட்கா, பான்மசாலா விற்ற 19 கடை வியாபாரிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. மதுரை மாநகர் பகுதிகளில் குட்கா விற்பனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட 19 கடைகளுக்கு நேற்று உணவுப்பாதுகாப்பு துறையினர் அதிரடியாக சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மதுரை மாநகர் வில்லாபுரம், விளக்குத்தூண், எஸ்.எஸ்.காலனி, மதிச்சியம், அண்ணா பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 19 கடைகளுக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி சீல் வைத்தனர்.

கடும் நடவடிக்கை

அண்ணாநகர் பஸ் நிலைய பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரின் கடைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பாக கடை உரிமையாளரிடம் எச்சரிக்கை விடுத்து மனிதாபி மான அடிப்படையில் கடையில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு சிறிது நேரம் கால அவகாசம் வழங்கிய பின்னர் சீல் வைத்தனர்.

குட்கா விற்பனை செய்த 19 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்ததோடு கடைகளுக்கான உணவுப்பாதுகாப்புத்துறை சான்று மற்றும் பதிவுச்சான்றுகளையும் ரத்து செய்தனர். மதுரை மாவட்டத்தில் எச்சரிக்கையை மீறியும் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனையில் ஈடுபடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story