அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்


அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்-சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என சீமான் கூறினார்.

சிவகங்கை

திருப்புவனம்

அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என சீமான் கூறினார்.

அரசியல் விளையாட்டு

நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் இல்ல விழாவில் கலந்து கொள்ள திருப்புவனம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- பா.ஜனதா கட்சி எங்களோடுதான் கூட்டணி என அ.திமு.க.வும், அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என அண்ணாமலையும் கூறுவார். அரசியல் விளையாட்டில் இதுவும் ஒரு விளையாட்டு ஆகும்.

மெட்ரோ திட்டத்தில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறுகிறார்கள். பின்பு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. நடவடிக்கை எடுக்க வேண்டிய உயரத்தில் இருக்கிற கட்சி, ஆட்சி ஆனால் ஒன்றுமே செய்யவில்லை. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உங்கள் கையில் உள்ளது. ஏன் நீங்கள் செய்யவில்லை?

அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என சீமான் கூறினார்.

அ.தி.மு.க.வின் ஆட்சியிலும் மெட்ரோ திட்டம் போடப்பட்டது.

அப்போது நடைபெற்ற ஊழலையும் தெரிவிக்கவும். நீங்கள் தி.மு.க.வின் ஊழல் பட்டியல், சொத்து பட்டியலை வெளியிட்டீர்கள். அ.தி.மு.க.வின் பட்டியலையும் வெளியிட வேண்டும். ஏனென்றால் நீங்கள் கூட்டணி வைத்து இருக்கிறீர்கள்.

பா.ஜ.க. அரசு குறிப்பாக சட்டத்தை அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்துகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரி, நீதிமன்றம் இதெல்லாம் பிரதமர் உடைய 5 விரல்கள் ஆகும். நீட்டினால் நீட்டும் மடக்கினால் மடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Related Tags :
Next Story