போடியில் சீசன் தொடக்கம்:கொடுக்காய்புளி கிலோ ரூ.300-க்கு விற்பனை


போடியில் சீசன் தொடக்கம்:கொடுக்காய்புளி கிலோ ரூ.300-க்கு விற்பனை
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:08+05:30)

போடியில் கொடுக்காய்புளி சீசன் ெதாடங்கி உள்ளதால் கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தேனி

போடி மலைப்பகுதிகளான முந்தல், குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் விவசாயிகள் கொடுக்காய்புளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் கொடுக்காய்புளி மரங்களில் காய்கள் அமோக விளைச்சல் அடைந்து காய்த்து தொங்குகின்றன.

இந்த காய்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்கின்றனர். மார்க்கெட்டிலும் விற்பனை அதிகரித்து உள்ளது. தற்போது கொடுக்காய்புளி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Related Tags :
Next Story