பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி


பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாவலில் படித்த பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்


நாவலில் படித்த பொன்னியின் செல்வனை திரையில் பார்த்தது எல்லையற்ற மகிழ்ச்சி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொன்னியின் செல்வன்

கல்கி எழுதிய புகழ்பெற்ற சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. இதை பிரபல இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து உள்ளார். இது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 30-ந் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம்பிரபு, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபல நடிகர்- நடிகைகள் நடித்து உள்ளனர். இந்த படம், கோவை மாவட் டத்தில் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியான நாள் முதல் தற்போது வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

கோவையில் உள்ள தியேட்டர்களில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பழங்கால உணர்வு

நான்சி, (சிங்காநல்லூர்) :- நான் பொன்னியின் செல்வன் நாவலின் 5 பாகங்களையும் படித்து உள்ளேன். நாவலில் படித்த கதாபாத்திரங்க ளை திரைப்படத்தில் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர், நடிகைகள் புராணகால ஆடை ஆபரணங்களில் தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர். அரண்மனை வரும் காட்சிகள் பிரமாண்டமாக உள்ளன. படம் பார்க்கும்போது பழையகாலத்துக்கு அழைத்து சென்ற உணர்வு ஏற்பட்டது.

தேவராஜன், (பூமார்க்கெட்) :-

நான் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கவில்லை. இந்த படம் குறித்து சிலர் கூறியதை கேட்டு குடும்பத்துடன் வந்து படம் பார்த் தேன். காட்சிகள் அனைத்தும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. நடிகர், நடிகைகளின் தமிழ் பேச்சு அருமையாக இருந்தது. தமிழில் பல ஆண்டுகளுக்கு பிறகு சரித்திர கதாபாத்திரங்கள் கொண்ட படத்தை பார்த்து உள்ளேன்.

பெண்கள் கொண்டாட்டம்

உஷா, (காந்திபார்க்) :- நடிகர் கார்த்தியின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருந்தது. சோழ சாம்ராஜ்யம் காட்சி கண்களுக்கு விருந்தாக இருந்தது. இது பிரமாண்ட படம் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

ஹர்சினி, (சலீவன் வீதி) :- பொன்னியின் செல்வன் நாவலின் 5 பகுதிகளையும் படித்து உள்ளதால் மிகுந்த ஆர்வத்துடன் படம் பார்க்க வந்தேன். சினிமாவுக்கு தகுந்தமாதிரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காட்சிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது. குந்தவையும், நந்தினியும் சந்திக்கும் காட்சி பெண்கள் கொண்டாடும் வகையில் உள்ளது. வந்தியத்தேவனாக வரும் கார்த்தியும், நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராயின் நடிப்பு பிரமாதம்.

எல்லையில்லா மகிழ்ச்சி

சிவசங்கிரி, (ஆர்.எஸ்.புரம்) :- பொன்னியின் செல்வன் நாவலின் 2 பகுதிகளை படித்து உள்ளேன். இந்த படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்தேன். தற்போது படத்தை பார்த்தது மகிழ்ச்சி. நான் எதிர்பார்த்ததை போல் படம் பிரமாண்டமாக உள்ளது. கதாபாத்திரங்களுக்கு நடிகர், நடிகைகளை மிக கச்சிதமாக டைரக்டர் மணிரத்னம் செய்து உள்ளார். இது படத்துக்கு மிகப்பெரிய பலம். பொன்னியின் செல்வன் நாவலை திரையில் பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சியாக உள்ளது.

அகிலேஷ், (காந்திபார்க்) :- கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் வந்தேன். பிரமாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் உள்ளது. அரண்மனை காட்சிகள் தத்ரூபமாக உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படம் பார்த்த உணர்வு ஏற்பட்டு உள்ளது. படத்-தில் இடம் பெற்ற அரண்மனை, காடுகள், ராஜ அலங்கார உடைகள் என அனைத்தையும் பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று வாழ்ந்த உணர்வு ஏற்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story