சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்


சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்
x

சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலரது டுவிட்டர் கணக்குகள் நேற்று முடக்கம் செய்யப்படு இருந்தது. இந்த நிலையில், இதற்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: -

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story