மேல்ராஜாதோப்பு கிராமத்தில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


மேல்ராஜாதோப்பு கிராமத்தில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம்-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி அருகே முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்ராஜா தோப்பு கிராமத்தில் ஓபல் ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சீதாராமர் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் சீர்வரிசை பொருட்களுடன் சீதாதேவி பெண் அழைப்பும், சிறப்பு யாகசாலை பூஜைகளும் நடந்தன. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதாராமர் திருக்கல்யாண உற்சவமும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. விழாவையொட்டி சீதாராமர் திருக்கல்யாண சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story