1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நெகமம்
பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் அறிவுரையின்பேரில் நெகமம் வடசித்தூர் ரோடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கப்பளாங்கரை காலனி அருகே சந்தேகப்படும்படியாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 22 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் விஷ்ணு(வயது 24) என்பவர், ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.