மறு முத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகள் பறிமுதல்


மறு முத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகள் பறிமுதல்
x

திருவாரூரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் உதவி ஆணையர், மறு முத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தார்.

திருவாரூர்

திருவாரூர்:

திருவாரூரில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் உதவி ஆணையர், மறு முத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தார்.

கடைகளில் ஆய்வு

திருவாரூர் பழைய பஸ் நிலையம், கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி-பழக்கடைகள், தள்ளுவண்டிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் தராசுகள் மறு முத்திரையிடப்பட்டு இருக்கிறதா? மற்றும் எடை அளவுகளில் முறைகேடு நடக்கிறதா? என்பது குறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மறுமுத்திரையிடப்படாத 24 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுகுறித்து அதிகாரி பாஸ்கரன் கூறுகையில், வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் தராசுகள் காலமுறைப்படி மறு முத்திரையிட்டு அதற்கான சான்று பெற்று உபயோகப்படுத்த வேண்டும். அவ்வாறு மறு முத்திரையிடாமல் உபயோகிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற ஆய்வு அவ்வப்போது தொடரும் என தெரிவித்தார்.

குழு

ஆய்வின்போது நாகை தொழிலாளர் துணை ஆய்வாளர் ராஜாங்கம், உதவி ஆய்வாளர்கள் ராதிகா (திருவாரூர் முதல் வட்டம்), ஹேமா (திருவாரூர் இரண்டாம் வட்டம்), செந்தில்குமார் (மன்னார்குடி முதல் வட்டம்), சிவகாமி (மயிலாடுதுறை இரண்டாம் வட்டம்), இளஞ்செழியன் (சீர்காழி), திருவாரூர் முத்திரை ஆய்வாளர் ராஜா மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.


Next Story