கள்ளக்குறிச்சியில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


கள்ளக்குறிச்சியில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கள்ளக்குறிச்சியில் 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் ஏமப்பேர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சந்தேகத்தின்பேரில் மறித்து அதில் இருந்த பையை சோதனை செய்தனர். அபபோது அதில் அரசால் தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி அக்ரகார தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சரவணன் (வயது 38) என்பதும், 25 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக எடுத்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சரவணணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story