ராமநத்தம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


ராமநத்தம் பகுதியில்  உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல்  வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x

ராமநத்தம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்


ராமநத்தம்,

ராமநத்தம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ராமநத்தம் மற்றும் ஆவட்டி கூட்டு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? என அதன் டிரைவர்களிடம் விசாரணை நடத்தியபோது, 6 ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 6 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, அதனை ஓட்டி வந்த 6 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story