கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x

பெரியகுளத்தில் கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

தேனி

பெரியகுளம் பகுதியில் டிராக்டரில் மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரியகுளம் மண்டல துணை தாசில்தார் ராஜாராம், ஜெயமங்கலம் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது மணல் அள்ளி வந்த டிராக்டரை மறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், டிராக்டரை ஓட்டி வந்தவர் அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 29) என்பதும், அனுமதியின்றி கிராவல் மண் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story