கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்


கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
x

விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் நடியப்பட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த, லாரியை மறித்து சோதனை செய்தபோது கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நடியப்பட்டு கிராமத்தை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story