பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்
பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், தியாகராஜன், ராமலிங்கம், உத்தமன், முகேஷ்கண்ணன், வசந்தராமன், பிரேம்குமார் ஆகியோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் தடையை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story