பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் பஜார் வீதியில் சோதனை நடத்தினர். அப்போது சீதாராமஅய்யர் தெருவில் ஒரு மொத்த வியாபாரி கடையில் 210 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அந்த கடைக்கு அபராதம் விதித்தனர்.

இதேபோல் வந்தவாசி நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை செய்து 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 ஆயிரம் ஆகும்.

ஆய்வின்போது நகராட்சி மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் லோகநாதன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story