பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 May 2023 1:30 AM GMT (Updated: 4 May 2023 1:30 AM GMT)

வால்பாறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் வால்பாறை நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. வால்பாறை நகர் பகுதி கடைக்காரர்கள் மற்றும் எஸ்டேட் பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story