சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்


சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
x

சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், சரக்கு வேன்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 4½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன், சரக்கு வேன்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சேலம் மண்டல துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அதிகாலை சூளகிரியை அடுத்த பெத்தசிலப்பள்ளியில் சென்ற சரக்கு வேனை மடக்கினர். அதில், 50 கிலோ எடையில் 50 மூட்டைகளில் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. வேனில் இருந்த கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அடுத்த முத்தனூருவை சேர்ந்த பெரியண்ணா (வயது 24), பொன்வேல் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி, சரக்கு வேனை வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூளகிரி

இதேபோல சூளகிரியில் பேரிகை சாலையில் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில், 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதை கடத்தியதாக சூளகிரி முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ரபிக் (38) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசி, வேனை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சூளகிரி, தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை, ஆனேக்கல் பகுதிகளில் அதிக விலைக்கு விற்றுவந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story