கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்


கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
x

சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

கெட்டுப்போன இறைச்சி

சிவகாசியில் உள்ள ஒரு சில ஓட்டல்கள் இறைச்சிகளை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவின் பேரில் நேற்று காலை நகராட்சி சுகாதார அதிகாரிகள் சித்திக், பாண்டியராஜ், முத்துராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பல்வேறு ஓட்டல்களில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது சிவகாசி காமராஜர் சிலை அருகில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சியை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சமையல் அறையில் இருந்த 10 கிலோ கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஓட்டலின் முன்பு வைத்து கிருமி நாசினி தெளித்து அழித்தனர். பின்னர் ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்கள்

இதை தொடர்ந்து முடங்கிநாடார் தெருவில் உள்ள ஒரு குடோனில் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து குடோன் உரிமையாளர் கண்ணனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் விஸ்வநத்தம் ரோட்டில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிவக்குமாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 2 குடோன்களிலும் 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாக அதிகாரி பாண்டியராஜ் தெரிவித்தார்.


Next Story