புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது


புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; பெண் உள்பட 2 பேர் கைது
x

திசையன்விளையில் வீட்டில் பதுக்கிய புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை முத்து பேச்சியம்மன் கோவில் தெருவில் உள்ள வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தபோது, அங்கு 60 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வெங்கடேஷ் மனைவி லிங்கேஷ்வரி (வயது 40), அவருக்கு புகையிலை பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்ததாக அப்புவிளை இடைச்சிதட்டை சேர்ந்த கணேசன் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story