புகையிலை பொருட்கள் பறிமுதல்


புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய் சண்முகநாதன் தலைமையிலான போலீசார் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லக்கூடிய தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் வத்திராயிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (வயது64), ராமநாதன் (58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story