அனாதையாக நின்ற காரில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
அனாதையாக நின்ற காரில் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம்
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த குண்டுக்கல் ஊராட்சி ஜோடுகுளியில் இருந்து பையூரான் கொட்டாய் செல்லும் வழியில் சேலம்- பெங்களூர் ெரயில் தண்டவாளம் செல்கிறது. இங்குள்ள ெரயில்வே சுரங்க பாலம் அருகில் அனாதையாக கார் ஒன்று நின்றது. இதுபற்றி நேற்று முன்தினம் இரவு தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அங்கு நின்ற காரில் 20 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இந்த கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்தும், புகையிலை பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story