19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு


19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு
x

திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருப்பத்தூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்க 14, 16 வயதுக்குட்பட்ட அணி வீரர்கள் தேர்வு திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் மற்றும் விளையாட்டு சங்கத்தால் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வீரர்கள் தேர்வு போட்டி திருப்பத்தூர் ஒய். எம்.சி. மைதானத்தில் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் சுந்தர் தலைமையிலும், செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையிலும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன், கே.சி.எழிலரசன், ஒய்.எம்.சி. செயலாளர் சாம்சன்மேத்யூ கலந்து கொண்டனர்.


Next Story