ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சுயஉதவிக்குழு பணம் ரூ.1 லட்சம் திருட்டு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சுயஉதவிக்குழு பணம் ரூ.1 லட்சம் திருட்டு
x

திசையன்விளை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சுயஉதவிக்குழு பணம் ரூ.1 லட்சம் திருட்டு போனது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து பொன்னாத்தியை சேர்ந்தவர் சந்திரபாபு. இவருடைய மனைவி சுகுணா (வயது 30). இவர் நேற்று முன்தினம் மகளிர் சுயஉதவிக்குழு பணத்தை எடுத்துக் கொண்டு, சமூகரெங்கபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்தினார். பின்னர் மீதி பணம் ரூ.1 லட்சத்தை மணிபர்சில் வைத்து அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு, திசையன்விளைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.

பின்னர் திசையன்விளையில் இருந்து நாகர்கோவில் செல்லும் பஸ்சில் ஏறி சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மன்னார்புரம் அருகே சென்றபோது, மணிபர்சில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதை யாரோ மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story