ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x

ஒடுகத்தூர் சந்தையில் ரூ.20 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

வேலூர்

ஒடுகத்தூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடக்கும் ஆட்டுச் சந்தை நேற்று நடந்தது. தற்போது, திருவிழா காலம் என்பதால் காலை முதலே விற்பனைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.20 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே பேரூராட்சி சார்பில் சந்தைக்கு என தனி இடம் ஒதுக்கி குடிநீர், மின் விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்றனர்.

1 More update

Next Story