தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை


தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 1 July 2023 2:45 AM IST (Updated: 1 July 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வரத்து குறைந்தது


நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.


இதேபோல் சமவெளி பகுதிகள் மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக வட மாநிலங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக விளைச்சலும் பாதிக்கப்பட்டது.


கிடுகிடு உயர்வு


இதனால் கோத்தகிரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி மார்க்கெட்டில் நாட்டு தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கூடலூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.70, ஊட்டி உழவர் சந்தையில் நாட்டு தக்காளி ரூ.68, ஆப்பிள் தக்காளி ரூ.75, மார்க்கெட்டில் நாட்டு தக்காளி ரூ.80, ஆப்பிள் தக்காளி ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-


கோத்தகிரி மார்க்கெட்டிற்கு தினமும் 2,000 கிலோ தக்காளி விற்பனைக்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம். மைசூர் மார்க்கெட்டிற்கு வடமாநிலங்களில் இருந்தும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தக்காளி கொள்முதல் செய்ய செல்கிறார்கள். ஆனால், அதற்கு ஈடாக தக்காளி வரத்து இல்லை. இதனால் அதிக விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்தால் தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



Next Story