செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x

செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது.

திருச்சி

காட்டுப்புத்தூர், ஜூலை.17-

காட்டுப்புத்தூரை அடுத்த உடையகுளம்புதூர் மேலப்புதூரில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். முதல் நாள் நிகழ்ச்சியாக திருத்தேர் தலை அலங்காரம் நடந்தது. 2-ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் மாவிளக்கு படைத்தும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

3-ம் நாள் நிகழ்ச்சியாக கிடா வெட்டுதல், தரம் போடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பொதுமக்கள் பூக்களையும், மாலைகளையும் கொண்டு வந்து தேருக்கு படைத்தனர். பின்னர் திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது தோளிலும், தலையிலும் தேரை தூக்கிக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பிறகு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் அம்மன் குடிபுகும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மேலப்புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story