ருக்மணி வரதராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம்


ருக்மணி வரதராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செம்போடை ருக்மணி வரதராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம்

நாகப்பட்டினம்


வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கு "கல்வி கற்றல்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வரதராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கலிவரதன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் அருணா மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கருத்தரங்கில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கல்யாண சுந்தரம், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் நடராஜன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் சவுமியா மற்றும் அருள்ஷீலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முன்னதாக கல்வி ஒருங்கிணைப்பாளர் கலை பூங்குழலி மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜூவ் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் துணை முதல்வர் முகமது பைசல் நன்றி கூறினார்.

=====



Next Story