கல்லூரியில் கருத்தரங்கு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்பேராயம் சார்பில் தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களில் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதற்கு எஸ்.ஆர்.எம.் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னதாக அனைவரையும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாக நிர்வாகி அருணாச்சலம் வரவேற்று பேசினார். தமிழ்பேராயம் தலைவர் கரு.நாகராஜன் கருத்தரங்கு பற்றி எடுத்துரைத்தார். கருத்தரங்கில் 15-க்கும் மேற்பட்ட சைவ ஆதீனங்களும், மகா சந்நிதானங்களும் பங்கேற்று கருத்தரங்கில் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர். விழாவில் கலந்து கொண்ட ஆதீனங்கள், மகாசந்திதானங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் பாரிவேந்தருக்கு வெள்ளி செங்கோல் நினைவு பரிசு வழங்கினார்கள்.
முடிவில் பதிவாளர் பொன்னுசாமி நன்றி கூறினார். பின்னர் மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் சரவணன் கருத்தரங்கு தொகுப்புரையாற்றினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முத்தமிழ்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். இதில் தமிழ்த்துறை தலைவர் ஜெய்கணேஷ், உதவி பேராசிரியர் பாலசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.