திருவண்ணாமலை அருண வித்யா கலை கல்லூரியில் கல்வி மற்றும் ஆளுமை திறன் குறித்த கருத்தரங்கம்
திருவண்ணாமலை அருண வித்யா கலை கல்லூரியில் கல்வி மற்றும் ஆளுமை திறன் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
திருவண்ணாமலை அருண வித்யா கலை கல்லூரியில் கல்வி மற்றும் ஆளுமை திறன் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
திருவண்ணாமலை அருண வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் கல்வியின் அவசியம் குறித்தும், ஆளுமை திறனை வளர்த்து கொள்வதன் அவசியம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஹேமாவதி வாழ்த்தி பேசினார். கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியை இந்துமதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆண்டிப்பட்டி அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியை கே.பி.காரல் மார்க்ஸ் கலந்து கொண்டு கல்வியின் அவசியம் குறித்தும், ஆளுமை திறமையுடன் நன்கு படித்து கல்லூரிக்கு பெருமை சேர்ப்பது குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இயற்பியல் துறை தலைவர் மணியன் நன்றி கூறினார்.