கிராமப்புற குழந்தைகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்


கிராமப்புற குழந்தைகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்
x

கிராமப்புற குழந்தைகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸ் பகுதி எல்லைக்கு உட்பட்ட கிராமப்புற குழந்தைகள் நலன் குறித்து போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் குன்னம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் கலந்து கொண்டு குன்னம் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள கொத்தடிமை தொழிலாளர்கள், தெருவோரம் தங்கி படிக்கும் குழந்தைகள், தந்தையால் குழந்தைகள் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட நிகழ்வுகள், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெற்றோரின் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆகிய பிரிவின் கீழ் குழந்தைகள் இருப்பின் அவர்களின் விவரங்களை போலீஸ் நிலையத்திற்கோ, காவல் துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

இதைத்தொடர்ந்து மேற்கண்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த விவரப்பட்டியலை ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். கலந்தாய்வு கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story