செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்


செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்துக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதம்

திருவாரூர்

நீடாமங்கலம்:

கோவையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை சுமார் 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ரெயில் நேற்று காலை 3 மணிநேரத்திற்கும் மேல் தாமதமாக 9.51 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. இதனால் நீண்ட தொலைவிலிருந்து பயணம் செய்து வந்த ரெயில் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.


Next Story