செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் விடுமுறை விளையாட்டு போட்டி
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் விடுமுறை விளையாட்டு போட்டி
கோயம்புத்தூர்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் விடுமுறை விளையாட்டு போட்டி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. கயிறு இழுத்தல், ஸ்கிப்பிங், 300 மீட்டர் ஓட்டப்பந்தயம், பாட்டுப் பாடுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மகரஜோதிகணேசன் பரிசுகள் வழங்கினார். இதையடுத்து மாணவர்கள்சேர்க்கையின் போது பெற்றோர்களிடம் பள்ளியின் சிறப்பம்சங்கள் மற்றும் பள்ளியின் வேலை நேரம் குறித்து ஆசிரியர்கள் விளக்கி கூறினர்.
Related Tags :
Next Story