திருப்பதி திருமலைக்கு 5 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு


திருப்பதி திருமலைக்கு 5 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைப்பு
x

பக்திசாரா பக்த சபா சார்பில் திருப்பதி திருமலைக்கு 5 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம்

திருப்பதி திருமலையில் கடந்த 27-ந் தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது. விழாவிற்கு சேலத்தில் இருந்து பக்திசாரர் பக்த சபா சார்பில் 5 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கும் பணி சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பொன்னுசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சபா நிர்வாகிகள் கூறுகையில், திருப்பதி திருமலை கோவிலுக்கு மாதா, மாதம் பூக்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக பிரம்மோற்சவ விழாவிற்காக அதிக அளவில் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். அதன்படி நாளை (சனிக்கிழமை) கருட சேவை நடக்கிறது. இதற்காக சேலத்தில் இருந்து 5 டன் எடை கொண்ட சிகப்பு மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்கள் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த மலர் மாலைகள் சேலத்தில் இருந்து லாரி மூலம் திருப்பதி கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனர்.


Next Story