சேலத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 5 டன் பூக்கள் அனுப்பி வைப்பு


சேலத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 5 டன் பூக்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 5 Jan 2023 1:00 AM IST (Updated: 5 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு 5 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி உற்சவத்துக்கு சேலத்தில் இருந்து பூக்கள் தொடுத்து அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் ஸ்ரீ பக்திசாரர் பக்த சபா சார்பில் ஸ்ரீவாரி உற்சவத்துக்கு பூக்கள் தொடுத்து அனுப்பும் பணி நடந்தது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு 5 டன் பூக்களை தொடுத்து கொடுத்தனர். இந்த பூக்கள் திருப்பதி திருமலைக்கு வாகனம் மூலம் அனுப்பப்பட்டது.


Next Story