முதியோர் தின விழா
முதியோர் தின விழா நடைபெற்றது
சிவகங்கை
இளையான்குடி
சிவகங்கையில் இயங்கி வரும் ஆதரவற்ற மனநல காப்பகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் முதியோர் தின விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் இனிப்பு வழங்கினார். மேலும் முதியோர் இல்ல வளாகத்தில் முதியோர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டு முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவளித்து முதியோர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் சமூக பணியாளர்கள் மாறன், நேகா மற்றும் செவிலிய பணியாளர் ஷாலினி, ரம்யா ஆகியோர் உடன் இருந்தார்கள்.
Related Tags :
Next Story