உயர்நிலை அலுவல்சாரா உறுப்பினர் குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்


உயர்நிலை அலுவல்சாரா உறுப்பினர் குழுவில் சேர விண்ணப்பிக்கலாம்
x

மாநில அளவில் முதியோர்களுக்கான உயர்நிலை அலுவல்சாரா உறுப்பினர் குழுவில் சேர விண்ணப்பிக்கலாம் கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய அரசின் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டத்திகீழ் வகுக்கப்பட்டுள்ள விதிகளின்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாநில அளவில் முதியோர்களுக்கான உயர்நிலை அலுவல் உறுப்பினர் குழு அமைக்கப்பட உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விருப்பம் உள்ளவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள மாநில உறுப்பினர் பதவியில் சேர்வதற்கு 45 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் நல மேம்பாட்டு பணிகளில் குறைந்த பட்சம் 3 வருட அனுபவமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 25-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி-606213 என்ற முகவரியிலோ அல்லது 04151-295098 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ அல்லது dswokallakurichi@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story