செந்தில் பாலாஜியின் ராஜினாமா பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை


செந்தில் பாலாஜியின் ராஜினாமா பா.ஜனதாவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை
x

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி நேற்று தனது அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் அலுவலகத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச எந்த அதிகாரமும் இல்லை. சட்டமன்றத்தில் சபாநாயகர் நடுநிலையாக நடக்கவில்லை. தி.மு.க. உறுப்பினர் போல பேசுகிறார். அதனால் தான் கவர்னர் சட்டமன்றத்தில் இருந்து சென்றார் என்று நினைக்கிறேன்.

கவர்னருக்காக எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் 10 பொய்களை நாங்களே கண்டுபிடித்தோம். பொய்களை எழுதி கொடுத்து அரசை பாராட்ட வேண்டும் என்று கூறினால் எப்படி பாராட்ட முடியும்? ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக கடந்த 8 மாதமாக வைத்திருந்தார்கள். அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருப்பதை எங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.


Next Story