தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் போலீசார் தீவிர வாகன சோதனை
உக்கடம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும், காவலர்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை,
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் எதிரொலியாக கோவையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவைப்புதூர், காந்திபுரம், ஒப்பணக்கார வீதி, குனியமுத்தூர், இடையர்பாளையம் பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க கோவை முழுவதும் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உக்கடம் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும், காவலர்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story