சாத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் பழுது
சாத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வா் பழுதினால் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சாத்தூர்,
சாத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வா் பழுதினால் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பத்திரப்பதிவு அலுவலகம்
சாத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு திருமணம் பதிவு செய்ய, புதிய கட்டிடம் கட்ட, நிலத்தை பதிவு செய்து கடன் பெற என பல்வேறு தேவைகளுக்காக எண்ணற்ற பேர் வருகின்றனர். வழக்கம்போல் நேற்றும் எண்ணற்ற பேர் வந்தனர். காலை 10 மணிக்கு வழக்கம் போல் பணிகள் தொடங்கியதும் சர்வர் பழுது ஏற்பட்டது. இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.
பின்னர் பத்திரம் பதிவு செய்ய வந்தவர்களை அதிகாரிகளும், அலுவலர்களும் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கும்படி வலியுறுத்தினர்.
சர்வர் பழுது
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காத்திருந்து சர்வர் பழுது சரியாகவில்லை. இதனால் அலுவலகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடனும், வேதனையுடனும் திரும்ப சென்றனர்.பத்திரப்பதிவு செய்வதில் கடந்த ஒரு வாரமாக சர்வர் பழுது தொடர்ந்து இருந்து வருவதாக அலுவலகத்திற்கு வந்தவர்கள் குற்றம்சாட்டிகனர்.
சர்வர் பழுது எப்போது சரியாகும் என அதிகாரிகளால் சரியாக கூற முடியாத நிலை உள்ளது. சர்வர் பழுது காரணமாக பத்திரப்பதிவு செய்ய ஒரு சிலர் பல முறை அலுவலகத்திற்கு வர வேண்டிய நிலை உள்ளது. சர்வர் பழுதினால் அரசுக்கு வர வேண்டிய வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆதலால் சர்வர் பழுதினை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.