பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலை


பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலை
x
தினத்தந்தி 25 Jun 2023 3:45 AM IST (Updated: 25 Jun 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவில் பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் பல்லாங்குழி ஆட வைக்கும் சர்வீஸ் சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

சர்வீஸ் சாலை

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவில் மேம்பாலம் உள்ளது. இதனருகில் கிணத்துக்கடவில் தினசரி காய்கறி சந்தை வழியாக அண்ணா நகர், செம்மொழிக்கதிர்நகர், பகவதிபாளையம், சாலைபுதூருக்கு செல்லும் சர்வீஸ் சாலை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு ஊருக்கு வரும் பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் வருகிறது. இதேபோன்று மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமாக...

இந்த நிலையில் சர்வீஸ் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதை விரிவுபடுத்தி தர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அந்த சாலையோரத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. மேலும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இது தவிர ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறி பல்லாங்குழி ஆட வைக்கிறது.

தவறி விழுந்து காயம்

இங்குள்ள குழிகளில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது கழிவுநீரை வாரியிறைத்து செல்லும் நிலை உள்ளது.

இது மட்டுமின்றி இரவில் இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகள் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சர்வீஸ் சாலையை விரிவுபடுத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. தற்போது சாலையும் மோசமாக காட்சியளிக்கிறது. கழிவுநீரும் வழிந்தோடுவதால், நிலைமை இன்னும் மோசமாகிறது. இந்த பரிதவிக்கும் நிலைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story