சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு


சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு
x

பெரம்பலூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான (பொறுப்பு) தனசேகரன் தலைமை தாங்கினார். இதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலட்சுமி ஆகியோர் கொண்ட ஒரு அமர்வும், 2-வது அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணையன், வக்கீல் செந்தில்குமார் ஆகியோரும் நீதிமன்றங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், வருவாய்த்துறை, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் வழக்காடிகள், எதிர் வழக்காடிகள் வரவழைக்கப்பட்டு இரு தரப்பு வக்கீல்கள் முன்னிலையில் பேசி 22 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட மொத்தம் ரூ.75 லட்சத்து 73 ஆயிரத்து 200-க்கான உத்தரவுக்கான ஆணைகளை முதன்மை மாவட்ட நீதிபதி தனசேகரன் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.

1 More update

Next Story