மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு
x

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 241 வழக்குகளில் ரூ.5.70 கோடிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

சிறப்பு மக்கள் நீதிமன்றம்

சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. நெல்லை மற்றும் 9 தாலுகாக்களில் மொத்தம் 9 அமர்வுகளுடன் இந்த நீதிமன்றங்கள் நடைபெற்றன.

நெல்லையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சந்திரா முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. வழக்குகளில் தீர்வு காணப்பட்ட வகையில், காசோலைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிபதி சந்திரா வழங்கினார்.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், பன்னீர்செல்வம், மகளிர் கோர்ட்டு நீதிபதி விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி மோகன்ராம், நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் சந்தானம், வள்ளியம்மா, மாஜிஸ்திரேட்டுகள் திருவேணி, ஆறுமுகம், அருண்குமார், நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன், அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் ஈஸ்வரப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரூ.5.70 கோடி தீர்வு

சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், குடும்ப நல வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 311 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 119 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.5.16 கோடி சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் 550 எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 122 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டு ரூ.53.78 லட்சம் சமரச தீர்வுக்கு முடிக்கப்பட்டது. மொத்தம் 241 வழக்குகளில் ரூ.5 கோடியே 69 லட்சத்து 98 ஆயிரத்து 188 சமரச தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

1 More update

Next Story