சேவுகராய அய்யனார் கோவில் குடமுழுக்கு


சேவுகராய அய்யனார் கோவில் குடமுழுக்கு
x

தேவூர் சேவுகராய அய்யனார் கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே தேவூர் இரட்டை மதகடி கிராமத்தில் சேவுகராய அய்யனார் கோவில் உள்ளது.‌ பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் 33 ஆண்டுகளுக்கு பிறகு‌ தமிழ் முறைபடி குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக 6-ந்தேதி ஐங்கரன் வேள்வியுடன் தொடங்கி வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம் உள்ளிட்டவைகள் 3 நாட்கள் தினமும் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை நான்காம் கால வேள்வி நிறைவு பெற்றது. பின்னர் ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்று புனிதநீர் கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்தை அடைந்தது, தொடர்ந்து கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில்உலகளாவிய ஆன்மீக சங்கத்தலைவர் திருவாரூர் சிவ நடராஜன் சுவாமிகள், திருப்பணி குழு தலைவர் ஜெயகுமாரன், பொருளாளர் செந்தில் வேலவன், திருப்பணி குழுவினர், பரம்பரை மருளாளிகள் மற்றும் கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story