சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x

அருப்புக்ேகாட்டை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்ேகாட்டை அருகே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

கழிவுநீர்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாளையம்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவில் கழிவுநீர் வீதிகளில் ஓடுவதால் அப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் குழாய் மற்றும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா உள்ளிட்ட தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

நடவடிக்கை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுைகயில், பாளையம்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவில் தண்ணீர் பம்பு அருகில் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக தினமும் எண்ணற்ற பேர் சென்று வருகின்றனர். கழிவுநீரை மிதித்து செல்வதால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கழிவு நீர் கால்வாயை சீரமைத்து முறையாக கழிவுநீர் செல்லவும், தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story