2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது


2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; சப்-இன்ஸ்பெக்டர் கைது
x

கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை மாநகர பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 17 மற்றும் 19 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் 17 வயது சிறுமி பிளஸ்-1 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். 18 வயது சிறுமி கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி அந்த 2 சிறுமிகளும் மாயமாகினர். இது குறித்து சிறுமிகளின் தாய், தனது மகள்களை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அந்த 2 சிறுமிகளும் கோவையில் உள்ள ஒரு வீட்டில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சிறுமிகளை மீட்டனர்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது

விசாரணையில் அந்த சிறுமிகளின் தாயின் கள்ளக்காதலன் துடியலூர் போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் துரைராஜ் (வயது55) பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமிகள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று கோவை அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜை கைது செய்தனர்.


Next Story