தனியார் பள்ளியில் 4 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு


தனியார் பள்ளியில் 4 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு
x

தனியார் பள்ளியில் 4 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றவாளியை கண்டறிவதற்காக சிறுமியின் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை

மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற 4 வயது மகளுக்கு அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தந்தை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது சரிவர பதில் கூறாமல் அலட்சிய போக்கில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த புகாரானது வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது குறித்து வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக குற்றவாளியை கண்டறிவதற்காக சிறுமியின் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story