சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 7 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 7 ஆண்டு ஜெயில் - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டை சேர்ந்தவர் தயாளன் (வயது 54). இவர் தனது உறவினரான அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 11-வயது சிறுமியை கடந்த 2009-ஆம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது. மேலும் சிறுமியின் தலையில் இருந்த ரிப்பனை கழற்றி கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் மாங்காடு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. தயாளன் மீது சுமர்த்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கில் சசிரேகா ஆஜரானார்.

1 More update

Next Story