திருநின்றவூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது


திருநின்றவூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 28 Jun 2022 8:03 AM GMT (Updated: 2022-06-28T13:40:22+05:30)

திருநின்றவூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆவடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 21-ந் தேதி வீட்டிலிருந்து மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருநின்றவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் ஆவடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்த சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சுபேர் உசேன் (வயது 27) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுபேர்உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நேற்று மாலை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுபேர் உசேனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story