மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 Nov 2022 6:45 PM GMT (Updated: 28 Nov 2022 6:46 PM GMT)

சீர்காழி அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரசு உதவிபெறும் பள்ளி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியின் தாளாளராகவும், தலைமை ஆசிரியராகவும் சாமுவேல் செல்லதுரை(வயது 54) என்பவர் உள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

இந்த பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் படித்து வருகின்றனர். பள்ளி தாளாளர் சாமுவேல் செல்லதுரை, இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர், சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பள்ளி தாளாளர், போக்சோவில் கைது

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா(பொறுப்பு) மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story