இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு


இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
x
தினத்தந்தி 18 Aug 2023 1:00 AM IST (Updated: 18 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்
சரவணம்பட்டி


திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர் மகனை போலீசார் கைது செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


தனியார் நிறுவன கணக்காளர்


கோவையை அடுத்த சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக 25 வயது இளம்பெண் ஒருவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரிடம், அந்த நிறுவன உரிமையாளரின் மகன் ரோகித் (வயது 26) அடிக்கடி பேசி உள்ளார்.


இந்த நிலையில் ரோகித் அந்த இளம்பெண்ணிடம் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை தான், நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி உள்ளார்.


பாலியல் தொந்தரவு


அதை ஏற்க மறுத்த ரோகித் அந்த இளம்பெண்ணிடம், தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் முடிக்க நிச்சயம் செய்தனர்.


இதை அறிந்த ரோகித், தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளார். மேலும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர்.



Next Story