இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை
குழித்துறை பாலவிளை பகுதியை சேர்ந்தவர் எட்வின்சன் (வயது 38), தொழில் அதிபர். இவர் மார்த்தாண்டத்தில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 28 வயதுடைய ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண்ணுக்கு எட்வின்சன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் எட்வின்சன் அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, 'உன்னுடன் ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும்' என்று கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த விவரத்தை கணவரிடம் கூறி அவர் அழுதார்.
கைது
இதனை தொடர்ந்து பெண்ணின் கணவர் செல்போன் மூலம் எட்வின்சனை தொடர்பு ெகாண்டு தட்டிக்கேட்டார். ஆனால் எட்வின்சன் அவரை மிரட்டும் தொனியில் பேசியதோடு, இதை வெளியே சொன்னால் உங்களுக்கு தான் அவமானம் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து அந்த பெண் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் எட்வின்சன் மீது சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.